பாதுகாப்பு அமைச்சகம்

எம்.வி. கவரட்டியை ஐஎன்எஸ் ஷர்துல் பாதுகாப்பாக கொச்சிக்கு கொண்டு வந்தது

Posted On: 19 DEC 2021 11:01AM by PIB Chennai

எம்.வி. கவரட்டியின் (லட்சத்தீவு டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் இயக்கும்  கப்பல்) ஸ்டார்போர்டு என்ஜின் அறையில் 30 நவம்பர் 2021 அன்று  தீ விபத்து ஏற்பட்டது, பின்னர் அது பணியாளர்களால் அணைக்கப்பட்டது.

 

இருப்பினும், தீயினால் ஏற்பட்ட சேதம் காரணமாக, கப்பலானது தனது இயந்திரங்களை இயக்க முடியாமல், 30 நவம்பர் 2021 அன்று ஆந்த்ரோத் தீவில் நங்கூரமிட்டு பழுதுபார்ப்புக்காக, இழுத்துச் செல்லும் உதவிக்குக் காத்திருந்தது.

 

கப்பலை பழுதுபார்ப்பதற்காக ஆந்த்ரோத்திலிருந்து கொச்சிக்கு இழுத்துச் செல்லுமாறு லட்சத்தீவு நிர்வாகத்தின் கோரிக்கையின் அடிப்படையில், ஐஎன்எஸ் ஷர்துல் என்ற கப்பலை இந்திய கடற்படை கடந்த டிசம்பர் 16-ம் தேதி அனுப்பி வைத்தது. டிசம்பர் 21-ம் தேதி கப்பல் அப்பகுதியை சென்றடைந்தது.

 

ஐஎன்எஸ் ஷர்துலின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் அடங்கிய நிபுணர் குழு, ஆந்த்ரோத் கடற்படைப் பிரிவின் தலைமை அதிகாரி லெஃப்டினெண்ட் கமாண்டர் பிஷ்ணு சி பாண்டாவுடன் இணைந்து சேதம் குறித்த விரிவான மதிப்பீட்டை எம்.வி. கவரட்டியில் 17-ம் தேதி மேற்கொண்டனர். கப்பலின் என்ஜினை இயக்குவதற்கு எம். வி. கவரட்டியின் பணியாளர்களுக்கு கடற்படைக் குழுவினர் உதவினார்கள்.

 

பின்னர் பல்வேறு அவசரகால ஒத்திகைகளுக்குப் பிறகு எம்.வி. கவரட்டியை கொச்சிக்கு ஐஎன்எஸ் ஷர்துல் டிசம்பர் 18 அன்று பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தது. இயந்திர கோளாறு ஏதேனும் ஏற்பட்டால் சரி செய்வதற்காக ஐஎன்ஸ் ஷர்துல் மற்றும் ஆந்த்ரோத் கடற்படைப் பிரிவின் பணியாளர்கள் எம்.வி. கவரட்டியில் வந்தனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783170

************



(Release ID: 1783226) Visitor Counter : 170