கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வந்தே பாரதம் நாட்டிய உத்சவத்தின் இறுதிப்போட்டி தில்லியில் 19-ம்தேதி நடக்கிறது

Posted On: 18 DEC 2021 2:58PM by PIB Chennai

விடுதலையின் 75-வது ஆண்டை அமிர்தப் பெருவிழாவாகக்க்கொண்டாடும் வகையில், பாதுகாப்பு அமைச்சகமும், கலாச்சார அமைச்சகமும் சேர்ந்து மேற்கொண்டுள்ள தனித்துவமான முன்முயற்சி வந்தே பாரதம் நாட்டிய  உத்சவம்  ஆகும்.

இதன் இறுதிப்போட்டி, டிசம்பர் 19-ம்தேதி, தில்லி ஜவஹர்லால் நேரு மைதான அரங்கில் நடைபெறவுள்ளது. நான்கு மண்டலங்களைச் சேர்ந்த 73 குழுக்களின் 949 நடனக்கலைஞர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இறுதி போட்டியில் வெல்பவர்கள் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துவதை இந்தியா மட்டுமல்லாமல்  உலகமே கண்டு மகிழும். 

இந்த இறுதிப்போட்டி நிகழ்ச்சியில், கலாச்சாரம் மற்றும் வெளியுறவு துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, பாதுகாப்பு மற்றும் சுற்றுலா துறை இணையமைச்சர் திரு அஜய் பட், பிரபல நடிகர்கள் மற்றும் நடனம் மற்றும் இசை நிபுணர்கள் இலா அருண், சோவனா நாராயண், ஷிபானி காஷ்யப், சோனல் மான்சிங்  உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இறுதிப்போட்டியை அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும், யு டியூப் சேனலிலும் நேரடியாக ஒளிபரப்ப காணலாம்

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782983

                                **************


(Release ID: 1783073)