பாதுகாப்பு அமைச்சகம்
புதிய தலைமுறை ஏவுகணை ‘அக்னி ப்பி’ வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது டிஆர்டிஓ.
Posted On:
18 DEC 2021 12:33PM by PIB Chennai
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ, இன்று காலை 11.06 மணியளவில், ஒடிசாவின் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் தீவிலிருந்து அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் திறன் பெற்ற, பெரும் தொலைவிற்குப் பாயும், புதிய தலைமுறை ‘அக்னி ப்பி’ ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்திச் சோதித்தது. சோதனையின்போது ஏவுகணையின் விசை, வீச்சு மற்றும் இதர அம்சங்களை கிழக்கு கடலில் நிலை கொண்டிருந்த கப்பல்கள் மற்றும் இதர கண்காணிப்பு நிலையங்கள் கண்காணித்தன. ஏவுகணை மிகத்துல்லியமாக அதன் அனைத்து விசை வீச்சுக்களையும் பின்பற்றி சென்றது.
அக்னி ப்பி ,குப்பியில் அடைக்கப்பட்டது போன்ற, இரட்டை அடுக்கு, திட எரிபொருள், பெரும் தொலைவிற்குப் பாயும் ஏவுகணையாகும். இந்த இரண்டாவது சோதனையில் , அனைத்து நவீன மற்றும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தின் நம்பிக்கையான திறனை ஏவுகணை நிரூபித்துள்ளது.
ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் டிஆர்டிஓ-வுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதன் சிறந்த செயல்திறன் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைச் செயலரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி, கூடுதல் சிறப்பு அம்சங்களுடன், இரண்டாவது சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட குழுவினரின் முயற்சியைப் பாராட்டியதுடன், ஒரே ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் வெற்றிகளையும் புகழ்ந்துரைத்தார்.
-----------------------------------------------------
(Release ID: 1782995)
Visitor Counter : 369