விவசாயத்துறை அமைச்சகம்
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செலுத்தப்பட வேண்டிய பிரிமியம் கட்டண மானியத்தில் மத்திய அரசின் பங்கு
Posted On:
17 DEC 2021 3:14PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தை சமீபத்தில் அதாவது காரீஃப் 2020 முதல் அரசு புதுப்பித்துள்ளதோடு வடகிழக்கு மாநிலங்களுக்கான பிரிமியம் கட்டண மானியப் பகிர்வு முறை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 50:50 ஆக இருந்ததை 90:10 ஆக மாற்றியுள்ளது. மீதமுள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பிரீமியம் பகிர்வு முறை 50:50 ஆக திட்டத்தின் பிற விதிகளுக்கு உட்பட்டு அமைந்துள்ளது.
மேலும், திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மொத்த பட்ஜெட்டில் 3%-த்தொகையை நிர்வாக செலவினங்களுக்கு ஒதுக்க வேண்டும் என திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.
தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் பயிர் வெட்டும் பரிசோதனைகள் குறித்த தரவுகளைப் பதிவு செய்வதற்கு வசதியளிக்கும் நோக்கில் சிசிஈ அக்ரி செயலியைப் பயன்படுத்த மாநிலங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், இணையக் கட்டணத்துடன் சேர்த்து ஸ்மார்ட் போன் கொள்முதல் விலையில் 50%-த் தொகையை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782626
**************
(Release ID: 1782813)