பாதுகாப்பு அமைச்சகம்
டிஆர்டிஓ உருவாக்கிய உயிரி கழிவறைகள்
प्रविष्टि तिथि:
17 DEC 2021 2:42PM by PIB Chennai
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உருவாக்கிய உயிரி கழிவறை கீழ்காணும் 3 முக்கிய அம்சங்களைக் கொண்டது.
- ஆக்சிஜன் இல்லாத முறையில் மனிதக்கழிவுகளை பாக்டீரியா தொகுப்புகள் உட்கிரகிக்கும் முறை ;
- மாறுபட்ட புவி – பருவ சூழல்களில் பயன்படுத்துவதற்கு வெவ்வேறு வடிவங்களிலான உயிரி கழிவறை உருவாக்கப்பட்டுள்ளது.
பாக்டீரியா தொகுப்பை செறிவூட்ட பசுமாட்டுச் சாணம் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொகுப்பில் கீழ்காணும் 4 வகையான பாக்டீரியாக்கள் உள்ளன :
- ஹைட்ரோலேஸ்
- அசிடோஜீனேஸ்.
- அசிட்டோஜீனேஸ்
- மீத்தோஜென்ஸ்
இந்தத் தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் உள்ள சுமார் 60 தொழில் நிறுவனங்களுக்கு டிஆர்டிஓ வழங்கியுள்ளது. இந்தத் தொழிற்சாலைகள் நாடு முழுவதும் உயிரி - மட்கவைக்கும் சாதனங்களை நிறுவியுள்ளது. இது தவிர ரயில் பெட்டிகளிலும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரிக் கழிவறைகள் பொருத்தப்பட்டு தினந்தோறும் 100 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளின் தேவைகைளை பூர்த்தி செய்து வருவதாகவும், பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
-----
(रिलीज़ आईडी: 1782805)
आगंतुक पटल : 181