சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
புதிய எய்ம்ஸ் போன்ற அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு பற்றிய அண்மைத் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
17 DEC 2021 2:23PM by PIB Chennai
பிரதமரின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் (பிஎம்எஸ்எஸ்ஒய்) புதிய எய்ம்ஸ் அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைப்பதற்கு இவற்றை செயல்படுத்தும் முகமைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் இன்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-20-ல் ரூ. 3.12 கோடியும், 2020-21-ல் ரூ.4.23 கோடியும் விடுவிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782598
****
(வெளியீட்டு அடையாள எண்: 1782765)
வருகையாளர் எண்ணிக்கை : 259