பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் திருமதி ஃபிளாரன்ஸ் பார்லியும் புதுதில்லியில் 3-வது வருடாந்தர பாதுகாப்புப் பேச்சுவார்த்தையை நடத்தினர்
प्रविष्टि तिथि:
17 DEC 2021 4:35PM by PIB Chennai
இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே மூன்றாவது வருடாந்தர பாதுகாப்புப் பேச்சுவார்த்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் திருமதி ஃபிளாரன்ஸ் பார்லி இடையே புதுதில்லியில் 2021 டிசம்பர் 17 அன்று நடைபெற்றது. இருதரப்பு, பிராந்திய, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட விஷயங்கள் இந்த வருடாந்தரக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன.
பெருந்தொற்று சவால்கள் இருந்த போதும் இருநாட்டு ராணுவங்களின் ஒத்துழைப்பு அதிகரித்திருப்பதை இரு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர். அனைத்து நிலைகளிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றியும் அவர்கள் விவாதித்தனர். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மையப்படுத்தி இந்தியாவும், பிரான்சும் சக்தி என்ற இருதரப்பு ராணுவ பயிற்சியை இந்தியாவும், பிரான்சும் 2021 நவம்பரில் பிரான்சில் நடத்தின.
முன்னதாக திருமதி ஃபிளாரன்ஸ் பார்லி, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார். தமது பயணத்தின் போது இந்திய பிரமுகர்கள் பலரையும் அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*****
(रिलीज़ आईडी: 1782738)
आगंतुक पटल : 348