சுரங்கங்கள் அமைச்சகம்
கனிம விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தம் அதிகம் பேர் கலந்து கொள்வதிலும், போட்டியிலும் கவனம் செலுத்துகிறது
Posted On:
16 DEC 2021 11:44AM by PIB Chennai
கனிமங்கள் (கனிம உள்ளடக்கங்களின் சான்றுகள்) விதிகள், 2015, மற்றும் கனிம (ஏலம்) விதிகள், 2015, ஆகியவற்றில் திருத்தம் செய்து,
கனிமங்கள் (கனிம உள்ளடக்கங்களின் சான்றுகள்) இரண்டாவது திருத்த விதிகள், 2021 மற்றும் கனிம (ஏலம்) நான்காவது திருத்த விதிகள், 2021 ஆகியவற்றை கனிமங்கள் அமைச்சகம் முறையே அறிவித்துள்ளது.
மாநில அரசுகள், தொழில் அமைப்புகள், சுரங்கத் தொழிலாளர்கள், பிற பங்குதாரர்கள் மற்றும் பொது மக்களுடன் விரிவான ஆலோசனைக்குப் பிறகு திருத்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அறிவியல் தரவுகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட கனிமங்களின் கலப்பு உரிமத்திற்கான ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள எந்தவொரு நபரும் பொருத்தமான தொகுதிகளை முன்மொழிய விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தம் உதவும்.
மாநில அரசால் அமைக்கப்பட்ட ஒரு குழு, அவ்வாறு முன்மொழியப்பட்ட தொகுதிகளின் கனிம வளத்தை மதிப்பீடு செய்து, ஏலத்திற்குரிய தொகுதியை பரிந்துரைக்கும். மேலும், ஒருவரால் முன்மொழியப்பட்ட தொகுதிகள் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டால், அதற்கான ஏலப் பாதுகாப்புத் தொகையில் பாதியை மட்டுமே அவர் டெபாசிட் செய்வதற்கான ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்த திருத்தங்கள் ஏலத்தில் அதிக பங்கேற்பை ஊக்குவிப்பதோடு போட்டியையும் ஊக்குவிக்கும். ஏலத்தில் விட கூடுதல் தொகுதிகளை அடையாளம் காண மாநில அரசுகளுக்கு இது உதவும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782112
*********
(Release ID: 1782362)
Visitor Counter : 330