ஆயுஷ்

'முழுமையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு'-க்கான புதிய பரிந்துரைகளை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது

Posted On: 15 DEC 2021 5:02PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தல் உலகம் முழுவதும் தொடர்ந்து வருவதால், ‘முழுமையான ஆரோக்கியம்’ என்ற கருத்தை முன்வைக்கும் விரிவான ஆவணம் ஒன்றை ஆயுஷ் அமைச்சகம்  வெளியிட்டுள்ளது.

முழுமையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு’ குறித்த பொதுமக்களுக்கான பரிந்துரைகள், கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பில் கவனம் செலுத்துகின்றன என்று அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

முழுமையான ஆரோக்கியத்திற்கான கருத்தை இந்த ஆவணம் முன்வைக்கிறது. வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களைக் குறிப்பிடுவதன் மூலம் தனிநபர்களின் சுய-கவனிப்பை இது வலியுறுத்துகிறது.

"முழுமையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு" குறித்த இந்தப் பரிந்துரைகள், கொவிட்-19 மற்றும் நீண்டகால கொவிட்-19-ஐ கருத்தில் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

பொதுவான தடுப்பு நடவடிக்கைகள், முறையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான முறைகள், உள்ளூர் மியூகோசல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் ஆவிபிடித்தல் (தூபனா) போன்ற தடுப்பு முறைகள் அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781769

                                                                                ***************

 

 

 

*

 

 



(Release ID: 1781995) Visitor Counter : 150