இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கேலோ இந்தியா யு21 பெண்கள் ஹாக்கி லீக் முதல் போட்டி: மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் நாளை தொடங்கி வைக்கிறார்.
प्रविष्टि तिथि:
14 DEC 2021 4:30PM by PIB Chennai
கேலோ இந்தியா யு21 பெண்கள் ஹாக்கி லீக்கின் முதல் போட்டியை தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கத்தில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்த லீக் போட்டி டிசம்பர் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்தப்படுகிறது. புதிதாக உருவாகி வரும் ஹாக்கி வீராங்கனைகளிடம் போட்டி தன்மையை ஏற்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த லீக் போட்டியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா அமைப்புடன் இணைந்து இந்த போட்டி நடத்தப்படுகிறது.
இதில் மொத்தம் 14 அணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி என பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த லீக் போட்டி குறித்து இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ப்ரீத்தம் ராணி சிவாஜ் கூறுகையில், ‘‘ நாடு முழுவதும் உள்ள ஹாக்கி வீராங்கனைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு இந்த லீக் போட்டி சிறந்த வாய்ப்பு’’ என கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781350
***************
(रिलीज़ आईडी: 1781529)
आगंतुक पटल : 220