சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 தடுப்புமருந்து உற்பத்தி திறன் குறித்த சமீபத்திய தகவல்கள்

Posted On: 14 DEC 2021 2:15PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

கொவிட்-19 தடுப்புமருந்துகளை பொறுத்தவரையில் கோவிஷீல்டை சீரம் இன்ஸ்டிட்டியூட் நிறுவனமும், கோவாக்சினை பாரத் பயோடெக்  நிறுவனமும் உற்பத்தி செய்து வருகின்றன.சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளபடி, கோவிஷீல்டின் தற்போதைய மாதாந்திர தடுப்பூசி உற்பத்தி திறன் சுமார் 250-275 மில்லியன் டோஸ்கள் ஆகும்.

பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட், ஹைதராபாத் தெரிவித்துள்ளபடி, கோவாக்சினின் தற்போதைய மாதாந்திர தடுப்பூசி உற்பத்தி திறன் சுமார் 50-60 மில்லியன் டோஸ்கள் ஆகும். இரண்டு நிறுவனங்களும் தற்போதைய உற்பத்தித் திறனில் 90%-ஐ எட்டியுள்ளன.

மேலும், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940-ன் புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகள், 2019-ன் விதிமுறைகளின் படி, ஸ்பூட்னிக்-வி, ஜைகோவி-டி உள்ளிட்ட தடுப்புமருந்துகளை தயாரிக்கவும், ஸ்பூட்னிக்-வி, மாடர்னா உள்ளிட்ட தடுப்புமருந்துகளை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781267

*********


(Release ID: 1781385) Visitor Counter : 203