குடியரசுத் தலைவர் செயலகம்
நான்கு நாடுகளின் தூதர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து சான்றுகளை வழங்கினர்
प्रविष्टि तिथि:
13 DEC 2021 5:51PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்தை இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் 4 நாடுகளின் தூதர்கள் சந்தித்து தங்களது சான்றிதழ்களை வழங்கினார்கள்.
கியூபா தூதர் திரு.அலேஜான்ரோ சிமான்கஸ் மரின், கானா தூதர் திரு. குவாக்கு அசோமா செரேமா, மங்கோலிய தூதர் திரு கன்போல்டு தாம்பஜாவ், திரு. சியாரோ லியோன் தூதர் திரு.ரஷித் சேசே ஆகியோர் குடியரசுத் தலைவரை தனித்தனியே சந்தித்து தங்களின் தூதர் நியமன சான்றிதழ்களை வழங்கினார்கள். குடியரசுத் தலைவர் அவர்களை தனித்தனியே சந்தித்தபோது கலந்துரையாடினார். அந்த நாடுகளுடன் இந்தியா நட்புறவை பகிர்ந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் வெற்றியடைய அவர்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781011
***
(रिलीज़ आईडी: 1781044)
आगंतुक पटल : 233