தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
அபு ரோபோகான் 2022 புதுதில்லியில் நடைபெறவுள்ளது சர்வதேச இறுதிப் போட்டிகளை தூர்தர்ஷன் நடத்தவுள்ளது
प्रविष्टि तिथि:
13 DEC 2021 1:17PM by PIB Chennai
தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் சிறப்புக்கு அங்கீகாரத்தைக் காணும் வகையில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரோபோகான் 2022-ன் சர்வதேச இறுதிப் போட்டிகளை தூர்தர்ஷன் நடத்தவிருக்கிறது. ஆசியா-பசிபிக் ஒலிபரப்பு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்ற ரோபோ போட்டி ஒவ்வொரு ஆண்டும் அதன் பல்வேறு உறுப்பு நாடுகளால் நடத்தப்படுகிறது.
அபு ரோபோகான் 2021 –ன் சர்வதேச ரோபோகான் போட்டி 2021 டிசம்பர் 12 அன்று சீனாவால் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து நிர்மா பல்கலைக் கழகம், குஜராத் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் ஆகியவற்றின் அணிகள் பங்கேற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
புதுதில்லியில் நடைபெறவுள்ள அபு ரோபோகான் 2022 சர்வதேச போட்டிக்கான அபு ரோபோகான் கொடியை சீனாவில் உள்ள ஷாண்டோங் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையத்திடம் இருந்து பிரசார் பாரதியின் சார்பில் நிர்வாகக் குழு உறுப்பினர் ஷைனா என்சி பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு போட்டிகளில் கலந்து கொண்டு இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற பல்கலைக் கழகங்களின் பொறியியல் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், அனைத்து பொறியியல் மாணவர்களும் குறிப்பாக பெண்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் ரோபோகான் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இந்த ரோபோகான் போட்டித் தொடர்பான கூடுதல் தகவல்களை அறிவதற்கு பிரசார் பாரதி அதன் இணைய தளத்தில் https://newsonair.com/robocon2022/ என்ற பக்கத்தை உருவாக்கியிருக்கிறது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780828
****
(रिलीज़ आईडी: 1780922)
आगंतुक पटल : 282