பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
புகார்கள் மேலாண்மைக்கான ‘லோக்பால் ஆன்லைன்‘ டிஜிட்டல் தளத்தை இந்திய லோக்பால் தலைவர் நீதிபதி பினாகி சந்திரகோஸ் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
13 DEC 2021 1:58PM by PIB Chennai
புகார்கள் மேலாண்மைக்கான ‘லோக்பால் ஆன்லைன்‘ டிஜிட்டல் தளத்தை இந்திய லோக்பால் தலைவர் நீதிபதி பினாகி சந்திரகோஸ் தொடங்கி வைத்தார். இந்தத் தளத்தில் நாட்டின் அனைத்து குடிமக்களும் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் புகார்களை இந்தத் தளத்தில் தாக்கல் செய்யலாம்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய நீதிபதி பினாகி சந்திரகோஸ், ஊழல் என்பது பொருளாதார சீர்கேட்டுக்கு முக்கிய காரணியாகும் என்றும், அது ஜனநாயகத்துக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் என்று கேடுவிளைவிக்கிறது என்று கூறினார். பொது சேவகர்களுக்கு எதிராக புகார்களை பராமரிக்கும் டிஜிட்டல் தீர்வாக லோக்பால் ஆன்லைன் இருக்கும் என்று அவர் கூறினார். புகார்களை வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புடமையுடனும் சிறப்பாக விரைந்து முடிக்க இது உதவும் என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் லோக்பால் அமைப்பின் உறுப்பினர் நீதிபதி அபிலாஷா குமாரி, லோக்பால் செயலர் பி.கே.அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780844
••••••••••••••••
(रिलीज़ आईडी: 1780918)
आगंतुक पटल : 253