பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

சிபிஐ மற்றும் இதர விசாரணை அமைப்புகளின் சுதந்திரம மற்றும் தன்னாட்சியை காக்கவும், வலுப்படுத்ததுவம் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியுடன் உள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தே்ந்திர சிங்

Posted On: 12 DEC 2021 5:27PM by PIB Chennai

சிபிஐ மற்றும் இதர விசாரணை அமைப்புகளின் சுதந்திரம மற்றும் தன்னாட்சியை காக்கவும், வலுப்படுத்ததுவம் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியுடன் உள்ளது என பிரதமர் அலுவலக இணையமைச்சர்  டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

சிறப்பாக பணியாற்றிய சிபிஐ அதிகாரிகளுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழா  தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், சிபிஐ இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் திரு சுரேஷ் என்.பட்டேல், உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பாக பணியாற்றிய 47 சிபிஐ அதிகாரிகளுக்கு போலீஸ் பதக்கங்களை டாக்டர் ஜித்தேந்திர சிங் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ஊழலை பொறுத்துக் கொள்ளாதது, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் மைய நடவடிக்கை ஆகியவை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான நிர்வாகத்தின் மூன்று முக்கிய மந்திரங்கள்.

கொள்கை அடிப்படையிலான நம்பிக்கைகளை பொருட்படுத்தாமல், சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை  வலுப்படுத்துவது, அனைவரின் கூட்டு பொறுப்பு. சமூகத்தில் ஊழல் அற்ற தன்மையை ஏற்படுத்தும் நாட்டின் தீர்மானத்தை வலுப்படுத்துவதில் இந்த அமைப்புகள் முக்கிய பங்களிக்கின்றன.

ஊழலை பொறுத்துக் கொள்ள மாட்டோம், கணக்கில் காட்டப்படாத வருவாயை மீட்போம் என்ற உறுதியை நிறைவேற்ற, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கடந்த 7 ஆண்டுகளில் பல நடவடிக்கைகளை எடுத்தது. பிரதமராக திரு நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு பதவி ஏற்றதும், கருப்பு பணத்தை கண்டறிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தார். அப்போதிருந்த ஊழல் தடுப்பு சட்டத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. லோக்பால் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது.1500க்கும் மேற்பட்ட சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, பல விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டன. 

சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளிப்பதை சில மாநிலங்கள் திரும்ப பெற்றுள்ளது கவலையளிக்கிறது. இதை மாநிலங்கள் திரும்ப பெற வேண்டும். மக்கள் அழுத்தத்தால், பல வழக்குகளை மாநிலங்கள் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கின்றன. இது சிபிஐ மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதை காட்டுகிறது. அதேபோல் சில அவசர வழக்குகளை நீதித்துறையும் சிபிஐ-க்கு பரிந்துரைக்கிறது.

இவ்வாறு டாக்டர் ஜித்தேந்திர சிங் பேசினார்.

 

மேலும் தகவல்களுக்கு  இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780673

                                                          ********



(Release ID: 1780739) Visitor Counter : 212