சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
எஸ்சி/எஸ்டி பிரிவினர் மீதான துன்புறுத்தல்களுக்கு எதிரான தேசிய உதவி மையம் நாளை தொடங்கப்படுகிறது
प्रविष्टि तिथि:
12 DEC 2021 1:53PM by PIB Chennai
அட்டவணை பிரிவினர் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) வகுப்பைச் சேர்ந்தவர்கள் மீதான துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக செயல்படுத்துவதை உறுதி செய்யும் நோக்கத்துடன், டிசம்பர் 13-ம்தேதி, தேசிய உதவி மையம் ஒன்றை மத்திய சமூக நீதி அமைச்சகம் தொடங்கவுள்ளது.
இந்த உதவி மையம் நாடு முழுவதும் 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் 24 மணி நேரமும் இயங்கும். குரல் அழைப்பு மூலம் இந்த எண்ணை அணுகலாம். இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் இந்த சேவை கிடைக்கும். இதன் செயலியும் செயல்படும்.
பாகுபாடு இன்றி அனைவரையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் இது செயல்படுத்தப்படும். ஒவ்வொரு புகாரும் பதிவு செய்யப்பட்டு, தீர்வு காணப்படும். பதிவு செய்யப்பட்ட அனைத்து புகார்களும் விசாரிக்கப்பட்டு, நீதிமன்றங்களில் வழக்காக பதிவு செய்யப்படும்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780635
**********
(रिलीज़ आईडी: 1780699)
आगंतुक पटल : 396