சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலை 334-பி பணிகளை முன்கூட்டியே முடிக்க இலக்கு
प्रविष्टि तिथि:
12 DEC 2021 1:16PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், தேசிய நெடுஞ்சாலைகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளர்ச்சியடைந்து வருவதாக, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தொடர் டுவிட்டர் பதிவில், என்எச்-334-பி 93% பணிகளுடன் நிறைவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், 3 மாதங்களுக்கு முன்பே 2022 ஜனவரியில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
உ.பி/அரியானா எல்லையில் (பாக்பத்) தொடங்கும் என்எச்-334-பி, ரோகனில் முடிவடைகிறது. இது பல சாலைகளை இணைக்கிறது. சண்டிகர், தில்லி பயணிகளுக்கும் இது நேரடி இணைப்பை வழங்குகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780624
*************
(रिलीज़ आईडी: 1780665)
आगंतुक पटल : 237