பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிசம்பர் 12-ந்தேதி இந்தியா கேட்-டில் இரண்டு நாள் ‘ ஸ்வர்னிம் விஜய் பர்வ்’ எனப்படும் வெற்றியின் பொன்விழா தினத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 DEC 2021 6:28PM by PIB Chennai

1971-ம் ஆண்டின் இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க போர் வெற்றி மற்றும் இந்தோ-பங்களாதேஷ் நட்புறவைக் குறிக்கும் வகையில், ‘ வெற்றியின் பொன்விழா தினம் டிசம்பர் 12,13 ஆகிய தேதிகளில், புதுதில்லியின் இந்தியா கேட் ல் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவை பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார. இந்த விழாவில் 1971 போரின் முக்கிய நிகழ்வுகளுடன், அப்போது பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களும்  காட்சிக்கு வைக்கப்படும். தொடக்க விழாவுக்குப் பின்னர், இந்த நிகழ்ச்சியின் கட்சிப் பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்குத்  திறந்து வைக்கப்படும்.

இதன் நிறைவு நிகழ்ச்சி, டிசம்பர் 13 அன்று நடைபெறும். திரு ராஜ்நாத் சிங் மற்றும் பங்களாதேசை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்பார்கள்.

****


(வெளியீட்டு அடையாள எண்: 1780523) வருகையாளர் எண்ணிக்கை : 301
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi