பாதுகாப்பு அமைச்சகம்
பினாகா ஏவுகணையின் சோதனை பொக்ரானில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
Posted On:
11 DEC 2021 11:17AM by PIB Chennai
நீட்டிக்கப்பட்ட தூர பினாகா பல்முனை ராக்கெட் ஏவுகணை அமைப்பு, பகுதி மறுப்பு வகை வெடி குண்டுகள் மற்றும் உள்நாட்டிலேயே தயரிக்கப்பட்ட ஃப்யூஸ்கள் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.
பினாகா ஏவுகணை அமைப்பின் சோதனை பொக்ரானில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆய்வகங்களான கனரக ஆயுதங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ஏஆர்டிஈ), புனே மற்றும் உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் (எச்ஈஎம்ஆர்எல்), புனே ஆகியவை இணைந்து பினாகா ஏவுகணை அமைப்பை வடிவமைத்துள்ளன.
தொலைவு நீட்டிக்கப்பட்ட பினாகாவின் செயல்திறன் டிஆர்டிஓ உறுதி செய்த பிறகு, அமைப்பின் தொழில்நுட்பம் தொழில்துறைக்கு வழங்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட பினாகா எம்கே-1 ராக்கெட்டுகளை டிஆர்டிஓ-வின் வழிகாட்டுதலுடன் தொழில் பங்குதாரர் தயாரித்துள்ளார்.
தொழில்துறையால் உருவாக்கப்பட்ட ராக்கெட்டுகள் செயல்திறன் மதிப்பீடு மற்றும் தரச் சான்றிதழ் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டன.
பினாகா ராக்கெட்டுகளுக்கான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஃபியூஸ்களும் சோதனை செய்யப்பட்டன. பினாகா ராக்கெட்டுகளின் பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு வெவ்வேறு ஃபியூஸ்களை புனேவில் உள்ள ஏஆர்டிஈ உருவாக்கியுள்ளது. தொடர்ச்சியான விமான ஃபியூஸ்களின் நிலைத்தன்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் இவை அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை குறித்த அனைத்து சோதனைகளும் வெற்றிகராக நடந்தேறியுள்ளன.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780412
*************
(Release ID: 1780462)
Visitor Counter : 265