நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

நாட்டில் உள்ள 2ம் நிலை மற்றும் 3ம் நிலை மையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை மையங்களின் தேசியநிலை மதிப்பீடு குறித்து அறிக்கை: நிதிஆயோக் வெளியீடு

Posted On: 10 DEC 2021 1:42PM by PIB Chennai

நாட்டில் உள்ள 2ம் நிலை மற்றும் 3ம் நிலை மையங்கள் மற்றும் மாவட்ட அளவில் அவசர சிகிச்சை மற்றும் காய சிகிச்சை மையங்களின் நிலவரம் குறித்த 2 விரிவான அறிக்கையை நிதி ஆயோக் இன்று வெளியிட்டது. 

அவசர சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை, ஆம்புலன்ஸ்  சேவைகள், மருத்துவ கட்டமைப்பு வசதிகள், மனித வளம் மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்களின் தற்போதைய நிலவரத்தை இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 

நிதி ஆயோக்கின் சுகாதாரத் துறை  உறுப்பினர் வி.கே.டாக்டர் பால், கூடுதல் செயலாளர் டாக்டர் ராகேஷ் சர்வால் ஆகியோர் முன்னிலையில் இந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

இந்த ஆய்வுகளை நிதி ஆயோக்குடன் இணைந்து ஜேபிஎன்ஏடிசி, தில்லி எய்ம்ஸ் ஆகியவை மேற்கொண்டது.

இந்த அறிக்கையின் முழு வாசகங்களை  கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.

https://www.niti.gov.in/sites/default/files/2021-12/AIIMS_STUDY_1.pdf

https://www.niti.gov.in/sites/default/files/2021-12/AIIMS_STUDY_2_0.pdf

                                                                                           *************

 

 (Release ID: 1780287) Visitor Counter : 106