ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரயில்வேயை நவீனமயமாக்கல்

Posted On: 10 DEC 2021 3:08PM by PIB Chennai

இந்திய ரயில்வேயை நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பாரம்பரியமாக இயக்கப்படும் ரயில்பெட்டிகளுக்குப் பதிலாக, தொழில்நுட்ப ரீதியில் அதிநவீன, பாதுகாப்பு மிகுந்த  பெட்டிகளை மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு முதல் இத்தகைய நவீனரகப் பெட்டிகளை இந்திய ரயில்வே தயாரித்து வருகிறது.  2021 நவம்பர் வரை 575 ஜோடி ரயில்களில் இந்தப்பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன. 

பெட்டிகள் கிடைப்பதற்கு ஏற்ற வகையில், படிப்படியாக இந்தப் பெட்டிகள்  ரயில்களில் சேர்க்கப்படும். மேலும், வந்தே பாரத் நவீன பெட்டிகள் தயாரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டு வருகின்றன. 

மாநிலங்களவையில், ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780073

----- 



(Release ID: 1780129) Visitor Counter : 120