இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
நிதியுதவி அளிப்பதற்கு பாரா-விளையாட்டுகளை முன்னுரிமை பிரிவில் வைத்துள்ளது மத்திய அரசு: திரு அனுராக் தாகூர்
Posted On:
09 DEC 2021 5:17PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் அளித்த பதிலில் கூறியதாவது:
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உட்பட நாட்டில் விளையாட்டுக்களை மேம்படுத்த கீழ்கண்ட திட்டங்களை மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் அமல்படுத்துகிறது.
கேலோ இந்தியா திட்டம், தேசிய விளையாட்டுகள் கூட்டமைப்புக்கான உதவி, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கும் சிறப்பு விருதுகள், தேசிய விளையாட்டு விருதுகள், சிறந்த விளயைாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம், பண்டிட் தீனதயாள் உபாத்யாய் தேசிய விளையாட்டு நல நிதி, தேசிய விளையாட்டுகள் மேம்பாட்டு நிதி, இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு பயிற்சி மையங்கள் போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.
நிதியுதவி அளிப்பதற்கு பாரா-விளையாட்டுகளை முன்னுரிமை பிரிவில் மத்திய அரசு வைத்துள்ளது. பாரா விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779779
**********
(Release ID: 1779919)