வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ரப்பர் உற்பத்தியின் மையமாக வடகிழக்கு பகுதி உருவாகும்: திரு பியூஷ் கோயல்
Posted On:
09 DEC 2021 2:15PM by PIB Chennai
ரப்பர் உற்பத்திக்கான மையமாக வடகிழக்கு பகுதி உருவாக முடியும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்கள், ஜவுளி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களில் 5 ஆண்டுகளில் மொத்தம் 2 லட்சம் ஹெக்டேர்களில் ரப்பர் தோட்டங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக திரு கோயல் கூறினார்.
‘டெஸ்டினேஷன் திரிபுரா - முதலீட்டு உச்சிமாநாட்டில்’ காணொலி மூலம் இன்று உரையாற்றிய அவர், 30,000 ஹெக்டேர் சாகுபடியுடன் நாட்டிலேயே இரண்டாவது பெரிய ரப்பர் உற்பத்தி மையமாக திரிபுரா உள்ளது என்றார்.
வாகன டயர் உற்பத்தியாளர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு பெரிய டயர் நிறுவனங்கள், வடகிழக்கு இந்தியாவின் ஏழு மாநிலங்களில் 200,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் ரப்பர் தோட்ட மேம்பாட்டிற்காக ஐந்து ஆண்டுகளில் ரூ.1,000 கோடி பங்களிப்பை வழங்க உள்ளன.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'வட-கிழக்கை, இந்தியாவின் 'அஷ்டலக்ஷ்மி' ஆக மாற்றுவதற்கான அறைகூவலை குறிப்பிட்ட அமைச்சர், 'வடகிழக்கு மீது கவனம் செலுத்தும்' திட்டத்திற்கும், 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கும் பிரதமர் முன்னுரிமை அளித்துள்ளார் என்று கூறினார். "இன்வெஸ்ட் இந்தியாவுக்கான பிரத்யேக வடகிழக்கு டெஸ்க் அமைக்கப்பட்டுள்ளது, உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது மற்றும் தொழில்துறைக்கு ஊக்கமளிக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
பாதுகாப்பு படைகளின் தலைவரின் மறைவு குறித்து அதிர்ச்சியையும் இரங்கலையும் வெளிப்படுத்திய திரு கோயல், ஜெனரல் பிபின் ராவத்தின் வார்த்தைகளான, “நாங்கள் நன்றியையும் கைதட்டலையும் எதிர்பார்ப்பதில்லை; மௌனத்தின் மூலம் நம்மை நாம் அறியப்படுத்துவோம், முழு உலகமும் தாமாகவே உங்கள் காலடியில் வரும்,” என்பதை நினைவு கூர்ந்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1779666
(Release ID: 1779791)
Visitor Counter : 269