நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

மோட்டா ரக தானியங்களின் கொள்முதல், ஒதுக்கீடு, விநியோகத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு திருத்தியமைத்துள்ளது

Posted On: 09 DEC 2021 3:32PM by PIB Chennai

மோட்டா ரக தானியங்களின் கொள்முதல், ஒதுக்கீடு, விநியோகத்திற்கு 21.3.2014 / 26.12.2014 தேதியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மூலம் கொள்முதல் முறைப்படுத்தப்பட்டது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்திய உணவுக் கழகத்துடன் ஆலோசித்து மாநில அரசால் தயாரிக்கப்பட்ட விரிவான கொள்முதல் திட்டம் குறித்து மத்திய அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தால் மத்தியத் தொகுப்பிற்கு விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் மோட்டா ரக தானியங்களை கொள்முதல் செய்ய மாநில அரசுகள் அனுமதிக்கப்பட்டன.

7.12.2021 தேதியிட்ட திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் சிறப்பு அம்சங்கள்:

கொள்முதல் கால இறுதியிலிருந்து 3 மாதங்களுக்குள் முழு அளவும் விநியோகிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முந்தைய கால அளவிலிருந்து கம்புக்கு 6 மாதங்கள், கேழ்வரகுக்கு 7 மாதங்கள் என விநியோகக் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொது விநியோக முறையின் மூலம் மோட்டா ரக தானியங்களை கொள்முதல் செய்வதும், பயன்படுத்துவதும் புதிய விதிமுறைகளால் அதிகரிக்கும்.

சிறுதானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு விநியோகிக்கப்படுவதால் பொது விநியோக முறையின் பயனாளிகளாகவும் உள்ள விளிம்பு நிலை மற்றும் ஏழை விவசாயிகள் லாபமடைவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779711



(Release ID: 1779785) Visitor Counter : 215