சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தமிழகத்தில் 44,817 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன
Posted On:
08 DEC 2021 3:02PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
இந்தியாவில் மின்சாரம்/கலப்பின வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஃபேம் இந்தியா என்ற திட்டத்தை கனரக தொழில்துறை அமைச்சகம், 2015-ம் ஆண்டில் உருவாக்கியது.
தற்போது, ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டம், ஏப்ரல் 01 , 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ 10,000 கோடி மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது; மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றிகள்/சார்ஜிங் நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 44,817 மின்சார வாகனங்களும், புதுச்சேரியில் 1,386 மின்சார வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 870,141 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
2019 முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ 10,000 கோடி மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது; மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றிகள்/சார்ஜிங் நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 44,817 மின்சார வாகனங்களும், புதுச்சேரியில் 1,386 மின்சார வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 870,141 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779233
*****
(Release ID: 1779332)