இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ் இந்திய பாராலிம்பிக் கமிட்டி 2017-18 முதல் 2021-22 வரை ரூ.32 கோடிக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்துள்ளது: திருஅனுராக் தாக்கூர்

இடுகை இடப்பட்ட நாள்: 07 DEC 2021 4:48PM by PIB Chennai

முக்கிய அம்சங்கள்:

  • இதர விளையாட்டு வீரர்களுக்கு இணையாக பாராலிம்பிக் தடகள வீரர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும்  வழங்குவதற்காக இந்திய பாராலிம்பிக் கமிட்டிக்கு அரசு நிதி / மானியம் ஒதுக்கீடு செய்கிறது.
  • பாரா தடகள வீரர்களுக்காக Tops திட்டத்தின் கீழ் கடந்த  பாராலிம்பிக் சுழற்சியின் போது, கூடுதலாக ரூ.10.50 கோடி செலவிடப்பட்டது.

அரசின் நிதியுதவி வழங்குவதற்கான பிரிவில், பாரா விளையாட்டுகள், ‘முன்னுரிமை’ பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதுடன், பாரா தடகள வீரர்களுக்கான பயிற்சி மற்றும் அவர்களது போட்டித் திறமையை வெளிப்படுத்துவதற்காக தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778879

 

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1779013) வருகையாளர் எண்ணிக்கை : 227
இந்த வெளியீட்டை படிக்க: Punjabi , English , Urdu , हिन्दी