அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

கடற்பாசி பயிரிடுதல் மற்றும் பதப்படுத்துதல் மூலம் ராமேஸ்வரத்தின் ஊரகப்பகுதி மக்கள் பயனடைந்துள்ளனர்

Posted On: 07 DEC 2021 3:28PM by PIB Chennai

கடற்பாசி பயிரிடுதல் கடற்பாசியின் சந்தை தேவைகளை வெளிப்படுத்துதலில் பயிற்சி பெற்றதன் மூலம் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த திருமதி முத்தா முத்துவேல் சாம்பையின் வாழ்க்கை மாற்றம் அடைந்துள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் தொழில்முனைவோருக்கு இப்போது அவரே நேரடியாக விற்பனை செய்வதால் அவரது வருவாய் 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

கடந்த 17 ஆண்டுகளாகக் கடற்பாசி பயிரிட்டு வரும் கடற்பாசி சாகுபடிக்கான காந்தாரி அம்மன் சங்கம் மற்றும் கடற்பாசி உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றின் உறுப்பினரான திருமதி முத்தா முத்துவேல் தமிழ்நாட்டின் மண்டபம் என்ற இடத்தில் அமைந்துள்ள சிஎஸ்ஐஆர்-சிஎஸ்எம்சிஆர்ஐ அமைப்பின் கடல் சார் ஆராய்ச்சி அலகில் பயிற்சி பெற்ற 2000 பேரில் ஒருவராவார்.

கடற்பாசி என்பது பரவலாக காணப்படும் தாவரவகையாகும். அஜீரணத்தை போக்குவரத்து பயன்படுவதால் இதனை 21-ம் நூற்றாண்டின் மருத்துவ உணவு என்றும் குறி்ப்பிடுவார்கள். புற்றுநோய், எலும்புமாற்று சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கும் இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

தங்களின் குடும்பங்களை பாதுகாக்கும் பல பெண்கள் உட்பட உள்ளுர் மக்கள்  கடற்பாசி வளர்ப்பில் பயிற்சி பெற்றுள்ளனர். கடற்பாசி பயிரிடுவதன் மூலம் கணிசமான தொகையை அவர்கள் இப்போது ஈட்டுகிறார்கள். பல மகளிர் குழுக்கள் பயனடைந்துள்ளன.

                                                                                                                  ***************


(Release ID: 1778925) Visitor Counter : 212


Read this release in: English , Urdu , Hindi , Punjabi