குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள்

Posted On: 06 DEC 2021 1:26PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர், திரு நாராயண் ரானே எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

தேசிய மாதிரி கணக்கெடுப்பு(என்எஸ்எஸ்) அலுவலகத்தின் 73வது சுற்றறிக்கையின் படி கடந்த 2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, பிரதமரின் வேலை உருவாக்க திட்டத்தின் கீழ்  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 11.10 கோடி பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த 2020-21ம் நிதியாண்டில் 5.95 லட்சம் பேரும், 2021-22ம் நிதியாண்டில் 2.90 லட்சம் பேரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

நாட்டில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இத்துறைக்கான மத்திய அமைச்சகம்  பிரதமரின் வேலை உருவாக்க திட்டம், சிறு-குறு தொழில்கள் தொகுப்பு மேம்பாட்டு திட்டம், பாரம்பரியத்  தொழில்களை மீண்டும் ஏற்படுத்தும் நிதி திட்டம், சிறு-குறு தொழில்கள் கடன் உத்திரவாதத்  திட்டம் என பல திட்டங்களை அமல்படுத்துகிறது.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ஆதரவு அளிக்க தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.

1. ரூ.20,000 கோடி கடன் உதவி அளிக்கப்பட்டது.

2. உத்திரவாதம் இன்றி ரூ.3 லட்சம் கோடி வரை தொழில் கடன்கள் வழங்கப்பட்டன.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778406

                                                                                      **************


(Release ID: 1778592) Visitor Counter : 283


Read this release in: English , Marathi , Bengali , Telugu