குடியரசுத் தலைவர் செயலகம்
மக்கள் மன்றத்திற்கு நிர்வாகப் பொறுப்புடையவர்களாக அதிகாரிகள் இருப்பதை நாடாளுமன்றக் குழுக்கள் உறுதி செய்கின்றன: குடியரசுத் தலைவர் திரு கோவிந்த்
प्रविष्टि तिथि:
04 DEC 2021 7:09PM by PIB Chennai
மக்கள் மன்றத்திற்கு நிர்வாகப் பொறுப்புடையவர்களாக அதிகாரிகள் இருப்பதை பொதுக் கணக்குக் குழு உள்ளிட்ட நாடாளுமன்றக் குழுக்கள் உறுதி செய்கின்றன என்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கூறினார்.
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இன்று (டிசம்பர் 4, 2021) நடைபெற்ற நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் நூற்றாண்டு விழாவைத் தொடக்கிவைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றம் என்பது மக்களின் விருப்பத்தின் உருவகம் என குடியரசுத் தலைவர் தெரிவித்தார். பல்வேறு நாடாளுமன்ற குழுக்கள் அதன் விரிவாக்கமாக செயல்படுகின்றன மற்றும் அதன் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றக் குழுக்கள் இல்லாவிட்டால் நாடாளுமன்ற ஜனநாயகம் முழுமையடையாது என்று கூறிய அவர். பொதுக் கணக்குக் குழு மூலம் தான் அரசின் நிதியை மக்கள் கண்காணிக்கிறார்கள் என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1778078
****
(रिलीज़ आईडी: 1778116)
आगंतुक पटल : 233