குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பதற்றமடைய வேண்டாம் ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவும் – உருமாறிய புதிய வகை கோவிட் தொற்று குறித்து குடியரசு துணைத்தலைவர்


தடுப்பூசியை விரைவில் செலுத்திக்கொள்ளுமாறு மக்களுக்கு வலியுறுத்தல்

இந்தியாவின் வெற்றி உலகின் வெற்றி; நமது வளர்ச்சிப் பயணத்தை எதுவும் தடுக்க முடியாது – குடியரசு துணைத்தலைவர்

இந்தியாவை மீண்டும் ‘விஸ்வகுரு’ -வாக மாற்ற அனைவரும் பாடுபட திரு.நாயுடு அழைப்பு

கவுதம் சிந்தாமணியி-யின் ‘நடுவழி யுத்தம் : மோடியின் ரோலர்-கோஸ்டர் இரண்டாவது முறை’

Posted On: 04 DEC 2021 5:57PM by PIB Chennai

புதிய வகை  கொரோனா தொற்றுப் பரவல் குறித்து, பதற்றமடைய வேண்டாம் என நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்ட குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, தொற்றுப் பரவல் முடியும் வரை, கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றுவதுடன், தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.  மக்கள் தயக்கத்தைக் கைவிட்டு, தாங்களாகவே சென்று விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். 

புதுதில்லியில் இன்று (4.12.2021) தமது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  திரு.கவுதம் சிந்தாமணியின்,  ‘நடுவழி யுத்தம் : மோடியின் ரோலர்-கோஸ்டர் இரண்டாவது முறை’  என்ற நூலை வெளியிட்டுப் பேசிய குடியரசு துணைத்தலைவர்,  கொரோனா பெருந்தொற்று ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பெரும் சவாலாக உருவெடுத்திருப்பதுடன்,  உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் குறிப்பிட்டார்.  

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் நிகழ்வுகள் நிறைந்த பயணம் குறித்து,  உரிய நேரத்தில்  இந்த நூலை எழுதியதற்காக திரு.சிந்தாமணி-க்கு பாராட்டு தெரிவித்த திரு.நாயுடு,  தற்கால வரலாற்றை எழுதுவது எளிதானது அல்ல என்றார்.    கடந்த ஏழு ஆண்டுகளில் ஆளுகையில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர்,  இந்த மாற்றங்கள், நாட்டிலுள்ள 130 கோடி மக்களுக்கு அதிகாரமளித்து, அவர்களது திறமையை வெளிக்கொணரும் என்றார்.    “வாழ்க்கை எதிர்பார்ப்புகள், உள்ளார்ந்த நிதிச் சேவைகள்,  சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்வது, வேலைவாய்ப்பு, சொந்தவீட்டில் வசிப்பது, அல்லது தொழில்முனைவுத் திறனை கவுரவித்தல்,  இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் போன்றவை ஒவ்வொரு நாளும் மேம்பட்டு வருகிறது”  என்றும் அவர் தெரிவித்தார்.   

பிரதமரின் தாரக மந்திரமான -  “சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம்“   ஆகிய மூன்று வார்த்தைகளை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர்,  உள்ளார்ந்த நிதிச் சேவை, காப்பீட்டு வசதி, ஏழைப் பெண்களுக்கான சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு போன்ற பல்வேறு துறைகளில், கடந்த சில ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள அபரிமிதமான முன்னேற்றத்தையும் பாராட்டினார்.    “குறைந்தபட்ச அரசாங்கம் அதிகபட்ச ஆளுகை” என்ற கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம், அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த, நவீன தொழில்நுட்பங்களை அரசு பயன்படுத்துவதாகக் கூறிய அவர், உலகிலேயே ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை அதிகளவில் தொடங்கும் நாடுகளில், இந்தியா மூன்றாம் இடத்தில் இருப்பது குறித்தும் மனநிறைவு தெரிவித்தார்.  

••••••••••••••••••



(Release ID: 1778112) Visitor Counter : 213