பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

1971 ஆம் ஆண்டு போரில் வீர மரணமடைந்தவர்களை கவுரவிக்கும் வகையில் என்சிசி ‘சுதந்திரத்தின் வெற்றிச் சங்கிலி’ மற்றும் ‘கலாச்சாரங்களின் மகா சங்கமம்’ ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது

Posted On: 04 DEC 2021 9:55AM by PIB Chennai

இந்தியாவின் 75வது சுதந்திரத்தின் திருவிழாவானா ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் ஒரு பகுதியாக தேசிய மாணவர் படை (என்சிசி) சுதந்திரத்தின் வெற்றிச் சங்கிலி மற்றும் கலாச்சாரங்களின் மகா சங்கமம்  ஆகிய நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் சுதந்திரத்தின் வெற்றிச் சங்கிலி நவம்பர் 28 முதல் டிசம்பர் 10, 2021 வரை நடத்தப்படுகிறது. இதில் 1971 ஆம் ஆண்டு போரில் வீர மரணமடைந்தவர்கள், நாடு முழுவதும் 75 இடங்களில் கௌரவிக்கப்படுவர்.

கலாச்சாரங்களின் மகா சங்கமம்என்பது டெல்லியில் நடைபெறவுள்ள சிறப்பு தேசிய ஒருங்கிணைப்பு முகாம்.  நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு நபர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் கலாச்சார கூறுகளை பரிமாறிக்கொள்வர். இதன் நிறைவு விழாவில் தேசிய ஒருங்கிணைப்பு பாடல் 22 மொழிகளில் பாடப்படும் மேலும், வெவ்வேறு மாநிலங்களில் சிறப்பு நடனங்கள் நடைபெறும்.

1971 ஆம் ஆண்டு போரில் வீர மரணமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை கவுரவிப்பதும், அதை நாட்டு மக்கள் அனைவருக்கும் காண்பிப்பதுமே இந்த மெகா நிகழ்வின் நோக்கமாகும்

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777907


(Release ID: 1778017) Visitor Counter : 185