சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்
Posted On:
03 DEC 2021 6:12PM by PIB Chennai
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டுத்துறை தில்லியில் இன்று நடத்தியது. இதில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கு சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், அமைப்புகள், இயக்கங்கள், மாநிலங்கள், மாவட்டங்களுக்கு அவர் தேசிய விருதுகளை வழங்கினார்.
மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர்கள் திரு ராம்தாஸ் அத்வாலே, திருமிகு பிரதிமா பவுமிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறந்த மாற்றுத்திறனாளி தொழிலாளி / சுய தொழிலாளி, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அளித்த நிறுவன அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக பணியாற்றிய தனிநபர்கள், அமைப்புகள், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான புதிய கண்டுபிடிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவைகளை வழங்கிய சிறந்த மாவட்டம், மாநிலம், சிறந்த ப்ரெய்லி அச்சகம், சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத்திறனாளி குழந்தை, சிறந்த மாற்றுத்தினாளி விளையாட்டு வீரர் ஆகிய பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறையின் செயலாளர் திருமதி அஞ்சலி பாவ்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777738
****
(Release ID: 1777875)