இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆண்கள் ஹாக்கி அணிக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.65 கோடி செலவழித்துள்ளது மத்திய அரசு

प्रविष्टि तिथि: 02 DEC 2021 5:09PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், கேள்வி ஒன்றுக்கு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. அனுராக் தாகூர் இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

ஆண்கள் சீனியர் ஹாக்கி அணிக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.45.05 கோடியும், ஜூனியர் ஹாக்கி அணிக்கு ரூ.20.23 கோடியை மத்திய அரசு செலவு செய்துள்ளது. பயிற்சி முகாம்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு போட்டிகள், பயிற்சியாளர்களின் ஊதியம் மற்றும் உபகரணங்கள் வாங்க இந்த தொகை செலவிடப்பட்டுள்ளது. 

மேலும் ஹாக்கி விளையாட்டுக்காக கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், கடந்த 2016ம் ஆண்டிலிருந்து ரூ.103.98 கோடி செலவில் 20 கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777302


(रिलीज़ आईडी: 1777460) आगंतुक पटल : 274
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi