மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
விடுதலை டிஜிட்டல் பெருவிழா “அரசுப் பள்ளிகளுக்கான தேசிய திட்டம்: இளைஞர்களுக்கான பொறுப்புள்ள செயற்கை நுண்ணறிவு”- திட்டத்தின் கீழ் 20 செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு
Posted On:
02 DEC 2021 12:57PM by PIB Chennai
விடுதலை டிஜிட்டல் பெருவிழா வாரம் நவம்பர் 29- டிசம்பர் 5, 2021 கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், ரயில்வே மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், அரசுப் பள்ளிகளுக்கான தேசிய திட்டமான இளைஞர்களுக்கான பொறுப்புள்ள நுண்ணறிவுத் திட்டத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, பல்வேறு சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கூடிய 20 திட்டங்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
புதுமைக் கண்டுபிடிப்புகளை அதிகரிப்பதற்கான உயர் தொழில்நுட்பத் திட்டமான BHUMI சவால் திட்டத்தின்கீழ், எல்லைப் பாதுகாப்புப் படை எதிர்நோக்கிய பல்வேறு சிக்கல்களுக்கு பயனுள்ள தீர்வை வெற்றிகரமாக அடையாளம் கண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு விருதுகளையும் அவர் வழங்கினார்.
திறன் இடைவெளியைக் குறைத்து, இளைஞர்களை செயற்கை நுண்ணறிவில் திறன் பெற்றவர்களாக அதிகாரம் அளிக்கும் நோக்கில் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையும் இண்டெல் இந்தியா நிறுவனமும் இணைந்து 2020-ஆம் ஆண்டு இத்திட்டத்தைத் தொடங்கின. நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதற்கான மனநிலையை உருவாக்கி, தேவையான திறன் பெற்றவர்களாக மாற்றி, எதிர்காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து ஆயத்தமாக இருக்கும் வகையில், இளம் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதன் முதல் கட்டமாக 35 மாநிலங்கள் மற்றும் 5,724 நகரங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்த 52,000க்கும் மேற்பட்ட மாணவர்களில், 11,466 மாணவர்கள் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.
இரண்டாம் கட்டத்தில் 100 கருத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 67 சிறுமிகள், 58 சிறுவர்கள் 125 மாணவர்களால் இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777149
****
(Release ID: 1777149)
(Release ID: 1777368)
Visitor Counter : 217