எஃகுத்துறை அமைச்சகம்
முன்னெப்போதும் இல்லாத வகையில் நவம்பர் வரை என்எம்டிசியின் மிகச்சிறந்த செயல்பாடு
प्रविष्टि तिथि:
02 DEC 2021 1:08PM by PIB Chennai
மத்திய எஃகு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிமப்பொருள் மேம்பாட்டுக் கழகம் (என்எம்டிசி) உருவாக்கப்பட்ட பின் எந்த நவம்பர் மாதத்திலும் இல்லாத மிக உயர்ந்த அளவாக 2021 நவம்பரில் இரும்புத் தாது உற்பத்தி 3.34 மில்லியன் டன் என்ற சாதனையைப் படைத்துள்ளது. விற்பனை 2.88 மில்லியன் டன்னாக உள்ளது.
நிதியாண்டு 22-ன் நவம்பர் வரையிலான முதல் 8 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் விற்பனை முறையே 24.37 மில்லியன் டன், 24.96 மில்லியன் டன்னாக இருந்தது. இது எந்த ஆண்டிலும் நவம்பர் வரையிலான செயல்பாட்டில் மிகவும் சிறந்ததாகும். கடந்த ஆண்டு இதே காலத்தை விட இந்த நிறுவனம் உற்பத்தியில் 36%, விற்பனையில் 33% வளர்ச்சி கண்டுள்ளது.
இந்த வளர்ச்சி மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள என்எம்டிசியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு. சுமித் தேவ் என்எம்டிசி குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தார்.
****
(रिलीज़ आईडी: 1777255)
आगंतुक पटल : 249