ஐஃஎப்எஸ்சி ஆணையம்
azadi ka amrit mahotsav

ஐஃஎப்எஸ்சிஏ (காப்பீட்டு இணைய ஒருங்கிணைப்பாளர்) முறைப்படுத்துதல், 2021-க்கான உத்தேச ஆலோசனைக் குறிப்பு மீது கருத்துக்களை ஐஃஎப்எஸ்சி ஆணையம் வரவேற்றுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 02 DEC 2021 1:03PM by PIB Chennai

இந்தியாவில் உள்ள சர்வதேச நிதிச்சேவைகள் மையங்களில் நிதி விஷயங்கள், நிதிச் சேவைகள் மற்றும் நிதி நிறுவனங்களை உருவாக்கவும், முறைப்படுத்தவும் ஒருங்கிணைந்த முறைப்படுத்தும் அமைப்பாக சர்வதேச நிதிச்சேவைகள் மையங்களின் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையம் இவற்றுக்குத் தகுதி வரையறை, பதிவு நடைமுறை, அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு வகை செய்யும் ஐஃஎப்எஸ்சிஏ (காப்பீட்டு இணைய ஒருங்கிணைப்பாளர்) முறைப்படுத்துதல், 2021-க்கான உத்தேச ஆலோசனைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது ஐஃஎப்எஸ்சிஏ-ன் இணைய தளமான https://ifsca.gov.in/PublicConsultation , inviting comments / -ல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது பொதுமக்களிடமிருந்து, சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கருத்துக்களும், ஆலோசனைகளும் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை 2021 டிசம்பர் 30 அன்று அல்லது அதற்கு முன்னதாக அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில  செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777151

                                                               ****
 


(வெளியீட்டு அடையாள எண்: 1777210) வருகையாளர் எண்ணிக்கை : 241
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu