கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வ.உ.சிதம்பரனார் துறைமுக 2021-ம் ஆண்டு கண்காணிப்பு வாரம் – நிறைவு நாள் விழா

இடுகை இடப்பட்ட நாள்: 02 DEC 2021 11:20AM by PIB Chennai

..சிதம்பரனார் துறைமுகத்தின் 2021-ம் ஆண்டு கண்காணிப்பு வார நிறைவு நாள் விழா 29.11.2021 இன்று துறைமுக பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது.

திரு.ஜெ.பிரதீப் குமார் IRSME., தலைமை கண்காணிப்பு அதிகாரி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அவர் கண்காணிப்பு வார விழாவின் போது துறைமுகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகள் நமது தேசத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக இரக்கும் தடைகற்களை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ளவும் அவர்களிடையே ஊழலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும் அமைந்தது என்று கூறினார்.

மேலும், அவர் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தற்போதைய முயற்சியானபொதுநலன்களை வெளிப்படுத்துதல் மற்றும் தகவல் அளிப்பவர்களின் பாதுகாப்பு” (Public Interest Disclosure and Protection of Informers) என்ற திட்டத்தை பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் பற்றி எடுத்துரைத்ததுடன், ஊழலை பற்றி தெரிவிப்பவர்களின் அடையாளம் பாதுகாக்கப்பட்டு மற்றும் அவர்களது புகார்களுக்கு தகுந்த நடவடிக்கைகளை கண்காணிப்புத் துறை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

திரு.தா.கி.ராமச்சந்திரன் ... ..சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழக தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தனது வாழ்நாளில் அரசாங்க நிறுவனங்களுடன் பல்வேறு வகையான தொடர்புகளில் இருப்பதனால் தொடர்புகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தி அதனை வெளிப்படையாக இயக்கப்படும் பொழுது அந்நிறுவனத்தின் இலக்குகளை எளிதாக அடைய முடியும் என்று கூறினார். மேலும் அவர் இந்தியாவின் “75-வது சுதந்திர திருநாள் அமுதபெருவிழா” (Azadi Ka Amrit Mahotsav)வினை கொண்டாடும் தருணத்தில் நாம் அனைவரும் வெளிப்படையான, ஊழலற்ற இந்தியாவை நோக்கி செல்வதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இவ்விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் துறைமுக ஊழியர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்களை திரு.தா.கி.ராமச்சந்திரன் ... ..சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் அவர்கள் திரு.பிமல்குமார் ஜா, ..சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக துணை தலைவர்கள் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்கள்.

முன்னதாக துறைமுக விழிப்புணர்வு வார விழாவின் பொருட்டு (26 அக்டோபர் முதல் 1, நவம்பர் 2021) பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மேற்கண்ட போட்டிகள் அனைத்தும் கொரோனா பெருந்தொற்று காரணமாக இணையதள வாயிலாக நடத்தப்பட்டது.

இந்நிறைவு விழாவில் துறைமுக துறை தலைவர்கள், துறைமுக மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். திரு.ஆர்.பாலாஜி ரத்தினம், துணை கண்காணிப்பு அதிகாரி நன்றியுரை ஆற்றினார்.

••••••

 


(வெளியீட்டு அடையாள எண்: 1777150) வருகையாளர் எண்ணிக்கை : 260
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu