மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

விடுதலையின் டிஜிட்டல் பெருவிழா: இந்தியாவில் மொழி, எழுத்தறிவு எல்லைகளை தாண்டி தீர்வு அளிப்பதில் செயற்கை நுண்ணறிவு உருவெடுத்து வருகிறது

Posted On: 01 DEC 2021 10:01AM by PIB Chennai

விடுதலையின் டிஜிட்டல் பெருவிழா வாரம் நவம்பர் 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 5-ந் தேதி வரை நடைபெறுவதையொட்டி. 2-வது நாளான நவம்பர் 30-ந் தேதி, செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின், ட்ரோன், புவிவெளி போன்ற உருவெடுத்து வரும் தொழில்நுட்பங்களை  பயன்படுத்துவது குறித்த விவாதங்கள் நடைபெற்றன. தற்சார்பு இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற நமது மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்கிற்கு வடிவம் கொடுக்கும் வகையில், மக்களின் ஆற்றலை வெளிக்கொண்டு வரும் தொழில்நுட்பத்தின் சக்தியை பயன்படுத்த இது வகை செய்கிறது.

 தேசிய மின்னணு நிர்வாக பிரிவின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு.அபிஷேக் சிங், டிஜிட்டல் மாற்றத்தில், உருவெடுத்து வரும் தொழில்நுட்பங்களின் பங்கு மிகவும் முக்கியமானவை என்று கூறினார். அரசு, தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறை  மேற்கொண்டு வரும் பல்வேறு தொழில்நுட்ப நடவடிக்கைகளை அவர்  விளக்கினார்.

தேசிய தகவலியல் மையத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் நீட்டா வர்மா, செயற்கை நுண்ணறிவின் ஆற்றல் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். மொழி, எழுத்தறிவு ஆகிய  எல்லைகளைத் தாண்டி உண்மையான சமூக அதிகார மயமாக்கலை அது கொண்டு வரலாம் என  அவர் தெரிவித்தார். இந்தியாவில் சுமார் 20 முதல் 30 கோடி மக்கள், ஸ்மார்ட்போன்கள் இல்லாததுடன், தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் எழுத்தறிவு மற்றும் மொழி அறிவை பெற்றிருக்கவில்லை என்று கூறிய அவர், கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இத்தகைய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநில ஐ.ஜி திரு. அமித் சின்ஹா, ட்ரோன் பயன்பாட்டைப் பற்றி விளக்கினார். கான்பூர் ஐஐடி கணினி அறிவியல் துறை பேராசிரியர் மணிந்திர அகர்வால், பிளாக்செயின் தொழில்நுட்பம் கிரிப்டோ கரன்சிக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதாக பொதுவாக நிலவும் கருத்தை மறுத்தார். நில உரிமை மற்றும் டிஜிட்டல் நில ஆவணங்களை பராமரிக்க இதை பயன்படுத்தலாம் என்று அவர் கூறினார்.

வத்வானி ஏஐ தீர்வு மற்றும் நடவடிக்கை பிரிவு தலைவர் திரு.சேகர் சிவசுப்பிரமணியன், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்க பன்முக அணுகுமுறை தேவை என குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776666

                                                                                                                                     ****

(Release ID: 1776666)
 

 


(Release ID: 1776706) Visitor Counter : 275