பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
29 NOV 2021 3:16PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார் .
சந்தை நிலவரங்களின் படியே எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே லிட்டருக்கு ரூ 5 மற்றும் ரூ 10 ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை பல மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் குறைத்துள்ளன.
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், ஈ10-ஐ (10% எத்தனால் கலந்த பெட்ரோல்) பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. நடப்பு எத்தனால் சப்ளை ஆண்டு 2020-21-ல், 01 டிசம்பர் 2020 முதல் 14 நவம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் 3672.46 கோடி லிட்டர் எத்தனால் கலந்த பெட்ரோலை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்துள்ளன.
வாகனங்களில் ஈ10-ன் விளைவை அறிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் மற்றும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் இணைந்து கூட்டு ஆய்வை நடத்தின. சுத்தமான பெட்ரோலுடன் ஒப்பிடும்போது ஈ10 பயன்படுத்தும் வாகனங்கள் வெளியேற்றும் ஹைட்ரோகார்பன் மற்றும் கார்பன் மோனாக்சைடு உமிழ்வுகள் சுமார் 20% குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
2021 ஏப்ரல்-செப்டம்பரில், ஒரு நாளைக்கு 14.2 கிலோ எடை கொண்ட 47.4 லட்சம் சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் 19 கிலோ கொண்ட 2.9 லட்சம் சமையல் எரிவாயு உருளைகளை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் விற்றுள்ளன.
சர்வதேச நிலவரங்களுக்கேற்ப வருவாய் மாதந்தோறும் மாறினாலும், வீட்டு உபயோக சமையல் எரிவாயுவுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் வர்த்தக உபயோக சமையல் எரிவாயுவுக்கு 18% ஜிஎஸ்டியை அரசு விதிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, கீழ்காணும் செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776114
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776113
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776115
********