மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நவம்பர் 29 முதல் டிசம்பர் 5 வரை விடுதலையின் டிஜிடல் பெருவிழாவைக் கொண்டாடுகிறது
Posted On:
28 NOV 2021 2:25PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பது குறித்த தமது தொலைநோக்கை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். நாட்டின் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடி வரும் நிலையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் முதலிடத்தைப் பிடிக்க உருவெடுத்து வரும் இந்தியாவின் ஆற்றலை பறைசாற்றும் வகையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், நவம்பர் 29 முதல் டிசம்பர் 5 வரை விடுதலையின் டிஜிடல் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. இந்த ஒரு வார கால விழாவில், இந்தியாவின் டிஜிடல் வெளியின் சாதனைகள் மற்றும் வருங்காலத்திற்கான திட்டங்கள் விளக்கப்படும். பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளையும் அது எவ்வாறு மாற்றி வருகிறது என்பதையும், நமது சமூக-கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் இது விளக்கும். இந்த ஒரு வாரகால விழாவில் மத்திய மின்னணு, தகவல், தொழில்நுட்பம், ரயில்வே, தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் நலத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திர சேகர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், தொழில்துறையினர் கலந்து கொள்வார்கள்.
டிஜிடல் மூலம் சமுதாய அதிகாரமயமாக்கல், அறிவார்ந்த பொருளாதாரம், தொழில்நுட்பம், தொடர்புத்துறையில் தற்சார்பு ஆகியவற்றை மேற்கொண்டு இந்தியாவை மாற்றும் வகையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொள்ளும்.
நிறைவு விழாவில், சிறப்பான செயல்பாட்டுக்கான விருதுகள், வங்கியாளர்கள் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திர சேகர் கலந்து கொள்வார்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775813
****
(Release ID: 1775829)
Visitor Counter : 224