நிதி அமைச்சகம்

லூதியானாவில் உள்ள இரண்டு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

Posted On: 27 NOV 2021 12:41PM by PIB Chennai

லூதியானாவில் உள்ள இரண்டு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் 2021 நவம்பர் 16 அன்று தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை வருமான வரித் துறை தொடங்கியது. லூதியானாவில் உள்ள 40 இடங்களில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இரு குழுமங்களில் நடைபெற்ற தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளின் போது, கணக்கில் வராத பணத்தின் மூலம் சொத்து விற்பனை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த ஆவணங்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய நபர் ஒருவரின் வீட்டை கட்டுவதற்கு கணக்கில் வராத பணம் செலவு செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கணக்கில் வராத சுமார் ரூ 2 கோடி பணம், அந்நியச் செலாவணி, சுமார் ரூ. 2.30 கோடி மதிப்புள்ள நகைகள் இந்த சோதனை நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775545

*******



(Release ID: 1775603) Visitor Counter : 166