தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
காண்போரை வசீகரிப்பவையாக கதைகள் இருக்க வேண்டும்: பிரபல திரைக்கதை எழுத்தாளர் சப் ஜான் எடத்தட்டில்
காண்போரை வசீகரிப்பவையாக கதைகள் இருக்க வேண்டும் என்று 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் மாஸ்டர் கிளாஸ் கலந்துரையாடலில் பேசிய பிரபல திரைக்கதை எழுத்தாளர் சப் ஜான் எடத்தட்டில் கூறினார்.
வாழ்வின் இடர்களை, பிரச்சனைகளை பேசுவதாக இருப்பதே நல்ல கதை என்று கூறிய அவர், கதைகள் நேர்கோட்டில் பயணிப்பவையாக இருக்கலாம், ஆனால் திரைக்கதை அப்படி இருக்க வேண்டியதில்லை என்றார்.
கதை, திரைக்கதை உள்ளிட்ட திரைப்பட உருவாக்கத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து தொடர்ந்து பேசிய அவர், ஒலியோடு ஒளி சேர்ந்து கதை சொல்லும் போது திரைக்கதை தான் அதை வடிவமைக்கிறது என்று கூறினார்.
கோவாவில் குழுமியிருந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா பிரமுகர்கள் மாஸ்டர் கிளாஸில் நேரில் கலந்து கொண்டனர். மேலும் திருவிழாவின் இணையதளமான https://virtual.iffigoa.org/ மூலமாக பலர் ஆன்லைனில் கலந்து கொண்டனர்.
சாணக்யன் மற்றும் குணா போன்ற படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படும் தென்னிந்தியாவின் முன்னணி திரைக்கதை எழுத்தாளரான எடத்தட்டில், இளம் மற்றும் ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களுடன் இக்கலந்துரையாடலின் போது பேசினார்.
கதை சொல்லும் கலை பற்றிய பல குறிப்புகள் மற்றும் யோசனைகளை அவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1775258
* * *
(Release ID: 1775436)
Visitor Counter : 188