பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு 72-வது அரசியலமைப்பு தினத்தைக் கொண்டாடும் வேளையில், பழங்குடியினர் நலனில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது

Posted On: 26 NOV 2021 11:43AM by PIB Chennai

பழங்குடியின மக்கள், தேசிய நீரோட்டத்தில் இணைய ஏதுவாக, பல்வேறு அம்சங்களிலும் பழங்குடியினரின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாத்து, ஊக்குவிக்க, அரசியலமைப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   நாடு தனது 75-வது சுதந்திர தினப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில், பழங்குடியின மக்களின் நலனுக்காக அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.  

சமுதாயத்தின் நலிந்த பிரிவினர், குறிப்பாக ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களில், அரசு சிறப்புக் கவனம் செலுத்தி ஊக்குவிப்பதுடன், சமூக அநீதி மற்றும் அனைத்து வகையான சுரண்டல்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டுமென, அரசியல் சட்டப் பிரிவு 46-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அரசியல் சட்டப்பிரிவு 15(4)-ல் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டிருப்பதோடு, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க சட்டப்பிரிவுகள் 16(4), 16(4A) மற்றும் 16(4B)-ல் வகை செய்யப்பட்டுள்ளது

அரசியல் சட்டப்பிரிவு 23-ன்படி, பழங்குடியினத்தவரை ஆட்கடத்தல், பிச்சையெடுக்க வைத்தல் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களாக நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.   இதன் அடிப்படையில், கொத்தடிமைத் தொழிலாளர் முறை(ஒழிப்பு)ச் சட்டம், 1976-ல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதுஅதேபோன்று, 14 வயதிற்குக் குறைவான சிறார்களை, எந்தத் தொழிற்சாலைகள் அல்லது சுரங்கங்கள் அல்லது ஆபத்தான் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை, அரசியல் சட்டப்பிரிவு 24 தடை செய்திருப்பது, பழங்குடியினர் நலனில் குறிப்பிடத்தக்கதாகும்

பஞ்சாயத்து அமைப்புகளில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க, பிரிவு 243D-ல் வகை செய்யப்பட்டுள்ளது

மக்களவையில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க, பிரிவு 330-ல் வகை செய்யப்பட்டுள்ளது.  

மாநில சட்டப்பேரவைகளில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க, பிரிவு 332-ல் வகை செய்யப்பட்டுள்ளது.  

அரசியலமைப்பின் ஐந்து மற்றும் ஆறாவது அட்டவணைகளில் இடம்பெற்றுள்ள அம்சங்களுக்கேற்ப, பிரிவு 244-ல் குறிப்பிட்ட சில பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   

வனப்பகுதிகளில் வசிப்போரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரிய வனப்பகுதியில் வசிப்போர் (வனச் சட்டங்கள் அங்கீகாரம்) சட்டம், 2006 இயற்றப்பட்டது.   பல தலைமுறைகளாக வனப்பகுதிகளில் வசித்து வந்தாலும், பழங்குடியின மக்களின் பதிவு செய்யப்படாத உரிமைகள், மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும்  வனப்பகுதி முறைப்படுத்தும் சட்டம், 2006 -ல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  

                                                        *******


(Release ID: 1775420) Visitor Counter : 713