மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கூட்டாக இணைந்து இந்திய இணைய ஆளுமை மன்றம் 2021-ஐ தொடங்கி வைத்தனர்
Posted On:
25 NOV 2021 5:06PM by PIB Chennai
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இந்திய தேசிய இணைய பரிமாற்ற அமைப்பால் இணைந்து நடத்தப்படும் இணைய ஆளுமை மன்றம் 2021-ஐ மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் இன்று தொடங்கி வைத்தார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இணைய ஆளுமை குறித்த இந்த காணொலி நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், செயலாளர் திரு அஜய் பிரகாஷ் சாவ்ஹ்னே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
"இணையத்தின் சக்தி மூலம் இந்தியாவை மேம்படுத்துதல்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்த நிகழ்வு, டிஜிட்டல் மயமாக்கலுக்கான வரைபடத்தைப் பற்றி விவாதிக்க இணைய நிர்வாகத்தின் பங்குதாரர்களை ஒன்றிணைத்து, உலகளவில் இந்தியாவை இன்றியமையாத பங்கேற்பாளராக உறுதிப்படுத்தும்.
நவம்பர் 25 முதல் 27 வரை நடைபெறும் இந்த நிகழ்வில் இணைய நிர்வாகத்தின் சர்வதேச கொள்கை வளர்ச்சியில் டிஜிட்டல் மயமாக்கலின் பங்கு மற்றும் முக்கியத்துவம் முன்னிலைப்படுத்தப்படும் .
தொடக்க நிகழ்வில் பேசிய அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், “பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் மிக முக்கியமான பகுதியாக் இணையம் திகழ்கிறது. அதன் நிர்வாக விதிமுறைகளை வரையறுப்பது முக்கியமானது. நாட்டின் தொலைதூரப் பகுதியில் வாழும் விளிம்புநிலை மக்களை மையமாகக் கொண்டு டிஜிட்டல் இடைவெளியை குறைக்க வேண்டும். ஆன்லைனில் பகிரப்படும் உள்ளடக்கத்தின் உரிமையைத் தீர்மானிப்பதும் முக்கியம்,” என்றார்.
இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் பேசுகையில், "இணையத்தை வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும், அனைவருக்குமானதாகவும் ஆக்க அரசு உறுதிபூண்டுள்ளது,” என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775048
****
(Release ID: 1775160)
Visitor Counter : 244