நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம் - பொம்மைகளுடன் பாதுகாப்பாக விளையாடுவோம்’

Posted On: 25 NOV 2021 9:36AM by PIB Chennai

சுதந்திரத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு நடைபெறும் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ விழாவைக் கொண்டாடும் வகையில் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம் - பொம்மைகளுடன் பாதுகாப்பாக விளையாடுவோம்’ என்ற தலைப்பில் வெபினாருக்கு (இணையவழி கருத்தரங்கிற்கு) இந்தியத் தரநிலைகள் குழு (BIS) ஏற்பாடு செய்திருந்தது.

பொம்மை உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கங்கள், கல்வியாளர்கள் என துறைசார்ந்த பங்குதாரர்கள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர். பல்வேறு வயதுக் குழந்தைகளின் கற்றல் திறன்களை வளர்ப்பதில் பொம்மைகளின் பங்கு, அவ்வாறான பொம்மைகளை வடிவமைத்தல் மேம்படுத்துதல் குறித்து இந்த கருத்தரங்கில் பேச்சாளர்கள் விளக்கினர். பொம்மைகளின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பொம்மைகளின் சோதனை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பொம்மைகளைத் தரப்படுத்துல் குறித்து BIS எடுத்துவரும் நடவடிக்கைகள், பொம்மைத் தொழில் துறை ஒழுங்குமுறையின் முக்கியத்துவம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொம்மைகளை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் மற்றும் பொம்மைகள் உற்பத்தித் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள்/புதுமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

********

 (Release ID: 1774890)



(Release ID: 1774937) Visitor Counter : 228