நித்தி ஆயோக்
டிஜிட்டல் வங்கிகள் குறித்த விவாத அறிக்கையை வெளியிட்டுள்ள நிதி ஆயோக், கருத்துகளை வரவேற்றுள்ளது
Posted On:
24 NOV 2021 5:01PM by PIB Chennai
டிஜிட்டல் வங்கிகள் குறித்த விவாத அறிக்கையை வெளியிட்டுள்ள நிதி ஆயோக், அது குறித்த கருத்துகளை வரவேற்றுள்ளது. நிதி ஆயோக் இணையதளத்தில் கிடைக்கும் இவ்வறிக்கை குறித்த கருத்துகளை 2021 டிசம்பர் 31-க்குள் அனுப்பலாம்.
நிதி, தொழில்நுட்பம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் சிறந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்தும், அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைகளின் அடிப்படையிலும், நிதி ஆயோக்கால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
சில்லறை கட்டணங்கள் மற்றும் கடன் துறையில் இந்தியா கண்டுள்ள வெற்றி, அதன் குறு சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் கட்டணங்கள் மற்றும் கடன் தேவைகளில் பிரதிபலிக்கத் தவறிவிட்டது. இந்தப் பிரிவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அவற்றை முறையான நிதி செயல்பாடுகளுக்குள் கொண்டு வருவதற்கும் தொழில்நுட்பத்தை திறம்பட மேம்படுத்துவதற்கான தேவையை தற்போதைய இடைவெளி வெளிப்படுத்துகிறது.
கருத்துகள் கொண்ட மின்னஞ்சலை “Comments on Discussion Document on Digital Bank Framework” எனும் தலைப்பிட்டு annaroy[at]nic[dot]in என்ற முகவரிக்கு 2021 டிசம்பர் 31-க்குள் அனுப்பலாம்.
முழு அறிக்கையை இங்கு காணலாம்: http://www.niti.gov.in/sites/default/files/2021-11/Digital-Bank-A-Proposal-for-Licensing-and-Regulatory-Regime-for-India.24.11_0.pdf
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774635
********
(Release ID: 1774773)
Visitor Counter : 260