தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும்
நையாண்டி சித்திரமான 'பாப்லு பாபிலோன் சே' 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது
‘எனது கிராமத்திற்கு சிலர் மரம் வெட்ட வந்துள்ளனர். வெப்பம் அதிகமாக இருப்பதால், அவர்கள் அதே மரத்தின் நிழலில் காத்திருக்கிறார்கள்.’
52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நையாண்டி சித்திரமான 'பாப்லு பாபிலோன் சே' சொல்ல விரும்பும் செய்தி இதுதான்.
இந்தியன் பனோரமாவின் திரைப்படம் சாரா பிரிவில் இத்திரைப்படம் இடம்பெற்றுள்ளது. அதன் இயக்குநர் திரு அபிஜீத் சார்த்தி கோவாவின் பனாஜியில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஊடகங்களுடன் இன்று உரையாடினார்.
படத்தைத் உருவாக்குவதற்கான தனது உத்வேகத்தைப் பற்றி பேசிய அபிஜீத், “நாம் எந்தப் பக்கமும் நிற்காமால் நடுநிலையாக இருந்தாலும், அதற்கான விளைவுகள் இருக்கும் என்பதை இப்படத்தின் மூலம் நான் சொல்ல முயற்சிக்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.
மக்கள் நல்ல கருத்துகளைப் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர், ஆனால் அவர்கள் அந்த திசையில் வழிநடத்தப்பட வேண்டும். "பார்வையாளர்கள் சற்றே நின்று அவர்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
படப்பிடிப்பிற்குப் பிறகு திரைப்படம் அதன் இறுதி வடிவத்தை எவ்வாறு எடுத்தது என்பதைப் பற்றி பகிர்ந்து கொண்ட அபிஜீத், 22 பக்கங்களில் ஸ்கிரிப்டை எழுதியதாகவும் கதையை மெதுவாக கொண்டு செல்ல விரும்பியதாகவும் கூறினார்.
"திரைப்படத்தில் பல காட்சிகளை நீக்கியிருக்கலாம், இருப்பினும் இத்தகைய இடைநிறுத்தங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இதனால் படம் அதன் போக்கில் முன்னேறும். இப்படம் மக்கள் மனதில் சில காலம் நிலைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774229
******
(Release ID: 1774393)
Visitor Counter : 256