நிதி அமைச்சகம்

ஜம்முவில் 145 பயனாளிகளுக்கு ரூ.306 கோடிக்கான கடன் அனுமதி கடிதங்களை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வழங்கினார்

Posted On: 23 NOV 2021 4:02PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீர் பயணத்தில் 2-ம் நாளான இன்று மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பல்வேறு வங்கிகளின் ரூ. 306 கோடி அளவுக்கு கடன் அனுமதி கடிதங்களை 145 பயனாளிகளுக்கு வழங்கினார். பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டம், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன.

ஜம்மு காஷ்மீருக்கு பல்வேறு திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்தார். இந்த திட்டங்கள் மூலம் நிதியுதவி மற்றும் கடன்கள் வழங்கப்படுகின்றன. சோபியான் பாரமுல்லா ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ள ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு திருமதி சீதாராமன் அடிக்கல் நாட்டினார். ரீசி மாவட்டத்தில் சலால், பக்கா, புதான் ஆகிய இடங்களில் ஜெ&கே வங்கி கிளைகளை அவர் தொடங்கி வைத்தார். நபார்டு திட்டத்தின் கீழ் 5 விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகளுக்கு பதிவு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

ஜம்மு பல்கலைக்கழக வளாகத்தில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச வங்கியளார் குழு ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் கலந்து கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774240

****



(Release ID: 1774381) Visitor Counter : 227