குடியரசுத் தலைவர் செயலகம்
2021 ஆம் ஆண்டுக்கான தீரச்செயல் விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்
ஹவில்தார் கே பழனிக்கு மறைவுக்குப்பின் வீர்சக்ரா விருது வழங்கப்பட்டது
प्रविष्टि तिथि:
23 NOV 2021 1:14PM by PIB Chennai
பாதுகாப்புத் துறையில் தீரச்செயல் புரிந்தோருக்கான விருதுகள் மற்றும் சிறப்பாகப் பணியாற்றியோருக்கான சேவை பதக்கங்கள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் (நவம்பர் 23,2021) இன்று காலை நடைபெற்றது. முதல்கட்டமான இந்த விருதுகளையும், பதக்கங்களையும் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
மகாவீர் சக்ரா ஒருவருக்கும், கீர்த்தி சக்ரா விருது ஒருவருக்கும், வீர்சக்ரா விருது 5 பேருக்கும், சௌரிய சக்ரா விருது 7 பேருக்கும், பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் 16 பேருக்கும், உத்தம் யுத் சேவா பதக்கம் 2 பேருக்கும், அதி விசிஷ்ட் சேவா பதக்கம் 25 பேருக்கும் வழங்கப்பட்டன.
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் கூடுகல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கே பழனிக்கு மறைவுக்குப் பின் வீர்சக்ரா விருது வழங்கப்பட்டது. 2020 ஜூன் 15 அன்று இரவு இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது தமது சகாக்களைப் பாதுகாப்பதற்காக தீரமுடன் எதிரிப்படையினருடன் மோதினார். இந்த மோதலில் எதிரிப்படையினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் தாய்நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்தார்.
*****
(रिलीज़ आईडी: 1774353)
आगंतुक पटल : 190