தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஈ-ஷரம் தளத்தின் பதிவுகள் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையிலான முயற்சிகளால் பெரும் வெற்றியடைந்துள்ளன

Posted On: 21 NOV 2021 5:52PM by PIB Chennai

-ஷரம் தளத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்புசாராத் துறைகளை சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, அது தொடங்கப்பட்ட 12 வாரங்களில் சீராக அதிகரித்து வருகிறது

நவம்பர் 20, 2021 நிலவரப்படி, பதிவு தொடங்கி 12 வாரங்களுக்கு மேலான நிலையில், மொத்தம் 8,43,89,193 அமைப்புசாரா தொழிலாளர்கள் -ஷரம் தளத்தில் பதிவு செய்துள்ளனர். அதற்கு முந்தைய நாளை விட இது 13,10,758 அதிகமாகும்.

-ஷரம் தளத்தின் பதிவுகளில் மிகப்பெரிய வெற்றிக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ்வின் உன்னிப்பான கண்காணிப்பும், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மாநில அரசுகள் மற்றும் தொழிற்சங்கங்களின் உணர்வுப்பூர்வ ஒத்துழைப்பும்காரணமாக உள்ளன.

மத்திய அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு ராமேஷ்வர் தெலி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால் ஆகியோர் வளங்களைத் திரட்டியதோடு, தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கும் காரணமாக இருந்தனர்.

தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) திரு டிபிஎஸ் நெகி மற்றும் அவரது அணியை சேர்ந்த அதிகாரிகள், தொழிற்சங்கத் தலைவர்கள், ஊழியர்கள், மாநில அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தி சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 60-க்கும் மேற்பட்ட மெகா முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773750

                                                                                    -----



(Release ID: 1773797) Visitor Counter : 185


Read this release in: English , Urdu , Marathi , Hindi